மணமகள் வீட்டு நாயை தாக்கிய மணமகன் வீட்டார்; அடிதடியில் நின்றுபோன திருமணம்; காதலை தூக்கி எறிந்த காதலர்கள்..!
The wedding was stopped because the grooms family attacked the brides family dog
உத்தரப் பிரதேசத்தின் பதேபூர் மாவட்டத்தில் சுமித் கேஷர்வானி மற்றும் தனு கேசர்வானி என்ற ஜோடிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம்
(பிப்ரவரி 18) கோட்வாலி பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் மாலை மாற்றும் சடங்கு உள்ளிட்ட திருமண சடங்குகள் நிகழ்ந்தது.
அதிகாலை 04 மணியளவில் நகைகள் வழங்கும் சடங்கு நடைபெற்றுள்ள போது, சிறிது தூரத்தில் கட்டப்பட்டிருந்த மணமகள் வீட்டு செல்லநாயான 'சிக்ஸர்' குறைத்துள்ளது.
சடங்குநேரத்தில் நாய் குறைத்துக் கொண்டிருந்ததால் மணமகன் வீட்டார் நாயை அடித்துள்ளனர். இதனைப்பார்த்து மணமகள் வீட்டார் ஆத்திரமடைந்துள்ளார். அத்துடன், மணமகன் வீட்டாரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் பின்னர், கைகலப்பாக மாறியது. இதன் போது இரு தரப்பினரும் நாற்காலிகள் மற்றும் தடிகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

குறித்த மோதலில் மணமகள் உட்பட சுமார் 08 பேர் காயமடைந்துள்ள நிலையில், மணமகளுக்கு விரலில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. அத்துடன், மணமகள் தரப்பைச் சேர்ந்த சிலருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்துள்ளது. மேலும், மணமகன் தரப்பைச் சேர்ந்த ஒன்றிரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதல் குறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அதன்பின்னர், இருதரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பேசியுள்ளனர். அப்போது கருணை இல்லாத குடும்பத்தில் தன்னால் வாழ முடியாது எனக் கூறி மணமகள் திருமணத்தை நிறுத்தக் கூறியுள்ளார். இதனையடுத்து இரு வீட்டாரும் சீர் வரிசைகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டு சமரசமாகப் பிரிந்து சென்றுள்ளனர்.
ஆனால், இந்த ஜோடி ஏற்கனவே காதலர்கள் என்பதும், ஒரு மாதத்திற்கு முன்பு ஆர்ய சமாஜத்தில் திருமணம் செய்திருந்த நிலையில், முறைப்படி குடும்பத்தினர் முன்னிலையில் நடத்தப்பட்ட சடங்கின் போது இந்த விபரீதம் நடந்துள்ளது.
English Summary
The wedding was stopped because the grooms family attacked the brides family dog