ரெயிலில் சக பயணியின் இருக்கையில் சிறுநீர் கழித்த நீதிபதியை பணியில் அமர்த்த உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்; எதிர்ப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம்..! - Seithipunal
Seithipunal


கடந்த 2018 -ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசம் இந்தூர் முதல் ஜபல்பூர் வரை செல்லும் ரெயிலில் சிவில் நீதிபதி ஒருவர் மது அருந்திவிட்டு சக பயணிகளுடன் தகராறில் ஈடுபட்டதோடு, சக பயணியின் இருக்கையில் சிறுநீர் கழித்து அலப்பறை செய்தார். அந்த சம்பவத்தின் போது அந்த பெட்டியில் பெண்களும் அமர்ந்திருந்தனர்.

அத்துடன், போதையில் தள்ளாடிய நீதிபதி, பயணிகளைத் தாக்கியதுடன், டிக்கெட் பரிசோதகரிடமும், தான் நீதிபதி என கூறி தகராறு செய்தார். இந்த அட்டூழியம் குறித்து வழக்குப்பதிவு செய்த ரெயில்வே போலீசார் அவருக்கு எதிரான ஆதாரங்களை சமர்ப்பித்தனர். அப்போது இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்டது.

இதனையடுத்து, குறித்த நீதிபதிக்கு எதிரான துறை ரீதியான விசாரணையில் அவர் குற்றவாளி எனத் தெரிய வந்தது. இதனாலோ, அவரை, 2019-இல் பணியிலிருந்து நீக்கி அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டார்.

ஆனால், அவர் மீதான குற்றவியல் வழக்கில் பிறழ் சாட்சியம் காரணமாக அவர் விடுவிக்கப்பட்டார். இதை அடிப்படையாகக் கொண்டு, கடந்த 2025-இல் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் அந்த நீதிபதியை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டது.

இருப்பினும், உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வு விசாரணைக்கு எடுத்தது. இதன் போது "நீதிபதியின் இந்தச் செயல் மிகவும் அருவருப்பானது" என்று கூறிய நீதிபதிகள், அவரை மீண்டும் பணியில் அமர்த்தியதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். அத்துடன், அவரை மீண்டும் பணியமர்த்தும் உயர்நீதிமன்றத்தின் முடிவை விமர்சித்த நீதிபதிகள், இது குறித்து மாநில அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Supreme Court objected to the reinstatement of the judge who urinated on a fellow passengers seat on a train


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?


செய்திகள்



Seithipunal
--> -->