அசாம் பஞ்சாயத்து தேர்தலில் அபார வெற்றி பெற்ற ஆளும் பா.ஜ.க. கூட்டணி..! - Seithipunal
Seithipunal


அசாமில் உள்ள 27 மாவட்டங்களுக்கு கடந்த 02 மற்றும் 07-ஆம் தேதிகளில் 02 கட்டங்களாக பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், அசாமின் கவுகாத்தி நகரில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:- பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், 2025-ஆம் ஆண்டுக்கான அசாம் பஞ்சாயத்து தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெருவாரியான வெற்றியை பெற்றுள்ளது என்று குறிப்பிட்டார். மேலும்,  ஆளும் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியான அசோம் கன பரிஷத் ஆகிய இரு கட்சிகளும் மொத்தமுள்ள 397 ஜில்லா பரிஷத் இடங்களில் 300 இடங்களை கைப்பற்றி உள்ளன என்று தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து அவர் குறிப்பிடுகையில், மொத்தமுள்ள 2,192 பஞ்சாயத்துக்கான இடங்களில் 1,436 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது என்றும், தேசிய ஜனநாயக கூட்டணி, ஜில்லா பரிஷத் தேர்தலில் 76.22 சதவீத வாக்குகளையும், பஞ்சாயத்துக்கான இடங்களில் 66 சதவீத வாக்குகளையும் கைப்பற்றி உள்ளன என கூறினார்.

இந்நிலையில், இந்த பஞ்சாயத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடு இணையற்ற ஆதரவு தெரிவித்ததற்காக, பா.ஜ.க. தலைவர் நட்டா, மத்திய அமைச்சர் அமித்ஷா, சர்பானந்தா சோனோவால் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The ruling BJP alliance has won a landslide victory in the Assam Panchayat elections


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->