ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும்.. முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கருத்து!  - Seithipunal
Seithipunal


ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க உத்தரவிட்டிருக்க வேண்டும் என்று  முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் வலியுறுத்தியுள்ளார்.

பீகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி 65 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் புயலை கிளப்பியது.

இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மேலும், தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து பாஜக வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். இந்த குற்றச்சாட்டுகளை தலைமை தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுத்து வருகிறது.

இதையடுத்து , வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் ஆதார் உள்ளிட்ட 12 அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை காட்டி தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி டெல்லியில்  பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் வாக்கு திருட்டு தொடர்பாக தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து நிருபர் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக குரேஷி கூறியதாவது,

வாக்கு திருட்டு குற்றச்சாட்டை ஹைட்ரஜன் அணுகுண்டுடன் ஒப்பிட்டு பேசினார். அது அரசியல் சார்ந்தது. ஆனால், அவரது குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்க வேண்டும். பீகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி பல்வேறு சிக்கலான பிரச்சினைகளை உருவாக்குவது மட்டுமின்றி அது குழவி கூட்டிற்குள் தேர்தல் ஆணையம் கையை விடுவது போன்றது. அது மிகவும் வலிகள் நிறைந்ததாக இருக்கும் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The former Chief Election Commissioner stated that the allegations made by Rahul Gandhi should be investigated


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->