பயங்கரவாதிகள் பற்றிய அச்சம் முடிவுக்கு வந்து விட்டது..லெப்டினன்ட் கவர்னர் சொல்கிறார்! - Seithipunal
Seithipunal


காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் பற்றிய அச்சம் மற்றும் அவர்களுடைய சூழல் ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டது என லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.


சிந்தூர் ஆப்ரேஷன் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பஹல்காம் சுற்றுலா தலத்தில் நடந்த பயங்கர தீவிரவாத தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாட்டையே உலகிய இச்சம்பவத்தை உலக நாடுகள் கண்டித்தது பாகிஸ்தானுக்கு எதிராக சிந்தூர் ஆப்ரேஷன் என்ற தாக்குதலை நடத்தியது.பயங்கரவாத முகாம்களை தாக்கி அளித்ததுடன் மத்திய அரசு சிந்து நதி நீரை தடுத்து நிறுத்தியது.

இந்தநிலையில்காஷ்மீரில் ஹர் கர் திரங்கா இயக்கத்தின்போது, பேரணிகளில் பெரும் திரளாக இளைஞர்கள் பங்கேற்ற  லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்..

ஜம்மு மற்றும் காஷ்மீரில் இந்திய வர்த்தக சேம்பர் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா கலந்து கொண்ட அவர் பேசும்போது கூறியதாவது.காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் பற்றிய அச்சம் மற்றும் அவர்களுடைய சூழல் ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டது என்றார்.

நடப்பு ஆண்டில் இதுவரை ஒரே ஒரு பயங்கரவாதியே ஆள்சேர்ப்பில் எடுக்கப்பட்டு உள்ளார் என பதிவாகி உள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் அனந்த்நாக் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஸ்ரீநகரை விட புல்வாமாவில் அதிக அளவில் தொழிற்சாலை பிரிவுகள் அமைக்கப்பட்டு வருகின்றன என்றும் கூறியுள்ளார்.

புல்வாமா மாவட்டத்தில் ஹர் கர் திரங்கா இயக்கத்தின்போது, பேரணிகளில் பெரும் திரளாக இளைஞர்கள் பங்கேற்றனர். சோபியா மற்றும் புல்வாமா மாவட்டத்தில் போலீசாரோ அல்லது அரசு அதிகாரிகளோ போகாத கிராமங்கள் உள்ளன.ஆனால், அந்த கிராமங்களில் இருந்தும் மக்கள் கலந்து கொண்டனர் என கூறியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The fear regarding terrorists has come to an end says the Lieutenant Governor


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->