கோயில்களில் உள்ள தங்கத்தின் இருப்புகளை பணமாக்க திட்டம்..?மத்திய அரசு விளக்கம்..! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் உள்ள கோயில்களில் உள்ள தங்கத்தின் இருப்புகளுக்கு மாற்றாக தங்கப் பத்திரங்களை வெளியிட அல்லது அவற்றை பணமாக்க மத்திய அரசு திட்டமிடுவதாக செய்திகள் பரவியுள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம்  விளக்கமளித்து கூறியுள்ளதாவது; நாடு முழுவதும் உள்ள கோயில் அறக்கட்டளைகள் அல்லது மத அமைப்புகளின் பொறுப்பில் உள்ள தங்கத்தை பணமாக்குவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்த அரசு திட்டமிடுகிறது என்பது எந்த அடிப்படையும் இல்லாத முற்றிலும் தவறான வதந்தி என்று விளக்கமளித்துள்ளது.

அத்துடன், கோயில் கோபுரங்கள், கதவுகள் அல்லது இதர கோயில் அமைப்புகளின் மீதுள்ள தங்கத்தகடுகளை இந்தியாவின் தங்க இருப்புகளாக கருதுவதாக பரவும் செய்திகளும் முற்றிலும் அடிப்படையற்ற தவறான தகவல் என்று மத்திய நிதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், மக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும்,  தெளிவுப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவது தேவையற்ற குழப்பத்தை உருவாக்கி மக்களை தவறாக வழிநடத்துகிறது என்று அறிவித்துள்ளது.

ஆகவே, அனைத்து குடிமக்களும் அங்கீகரிக்கப்பட்ட தளங்கள் மூலம் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ தகவல்களை தெரிந்து கொள்ளுமாறு அரசு வலியுறுத்த்தியுள்ளது. கொள்கை முடிவுகள் அல்லது அரசுத்திட்டங்கள் தொடர்பான எந்தவொரு தகவலும் அதிகாரப்பூர்வ பத்திரிகை செய்திகள், அரசு இணையதளங்கள் மற்றும் பொது தகவல் தளங்கள் மூலம் பகிர்ந்து கொள்ளப்படும் என்று விளக்கமளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Central Government issues a clarification regarding reports alleging a plan to monetize gold reserves held in temples


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




சினிமா

Seithipunal
--> -->