பரபரப்பை கிளப்பிய ட்ரம்ப்; அவருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசவில்லை என மத்திய அரசு திட்டவட்டம்..!
The central government has categorically stated that Prime Minister Modi did not speak to Trump on the phone
ரஷ்யாவிடம் ருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக எதிர்த்து வருகிறார். இவ்வாறு இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் தான் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்கு ரஷ்யாவுக்கு நிதி கிடைப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், ''ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது எனக்கு மகிழ்ச்சி தரவில்லை. பிரதமர் மோடி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என உறுதி அளித்தார். இந்த நடவடிக்கை, உக்ரைன் மீது தாக்குதலில் ஈடுபடும் ரஷ்யாவை தனிமைப்படுத்தும் '' எனத் டொனால்ட் டிரம்ப் நிருபர்களிடம் தெரிவித்துள்ளமை தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு விளக்கி அறிக்கை வெளியிட்டுள்ளது அதில், ''கச்சா எண்ணெய் இறக்குமதி விவகாரத்தில் இந்தியாவின் நலனுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும்,'' எனத் தெரிவித்து இருந்தது.
அத்துடன், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: 'என்னிடம் உள்ள தகவலின்படி, நேற்று அதிபர் டிரம்ப்பை, பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசவில்லை'என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
The central government has categorically stated that Prime Minister Modi did not speak to Trump on the phone