சீனாவுடனான எல்லை பிரச்சினை, பாகிஸ்தானின் மறைமுக போர்: இந்தியாவிற்கு பெரிய சவால்: முப்படை தலைமை தளபதி..! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் நாட்டின் பாதுகாப்புக்கு எதிரான சவால்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் 'சீனாவுடான எல்லை பிரச்சினை என்பது நமக்கு மிகப் பெரும் சவால்' என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில் கூறியதாவது: சிந்தூர் நடவடிக்கையின்போது, பயங்கரவாத முகாம்களை அழிக்கவும், எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் மட்டுமே தாக்க வேண்டும் என்றும் தெளிவாக அறிவுறுத்தப்பட்டது என்று கூறியுள்ளார். மேலும்,  தாக்குதலில் போது திட்டமிடுதல் மற்றும் அழிக்க வேண்டிய இலக்குகளை தேர்ந்தெடுப்பதில் முழு சுதந்திரம் தங்களுக்கு வழங்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை என்பது பலமுனை தாக்குதல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பாகிஸ்தானின் மறைமுக போர் என்பது நமது தேசிய பாதுகாப்புக்கு பெரிய சவால் என்றும், இந்தியாவை ரத்தம் சிந்த வைப்பது தான் பாகிஸ்தானின் உத்தி. என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நாம் எதிர்கொள்ளும் சவால்கள் என்பது தற்காலிகமானவை அல்ல. என்றும் அவை வெவ்வேறு வடிவங்களில் உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார். அதாவது, முதலாவது, சீனாவுடனான எல்லை பிரச்னை என்பது நமக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று தான் நினைப்பதாகவும், 02-வது பெரிய சவால் என்பது பாகிஸ்தானின் மறைமுக போர் என்று பேசியுள்ளார்.

அத்துடன், நமது (இந்தியா) இரு எதிரிகளும் அணு ஆயுத வல்லமை படைத்தவை. அவர்களுக்கு எதிராக நாம் என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறோம் என்பதை தீர்மானிப்பது எப்போதுமே சவால் ஆகவே இருக்கும் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The border issue with China and Pakistans proxy war are both big challenges for India says the Chief of the Tri Services


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->