பா.ஜ.க. பொய்களையே பரப்புகிறது: சித்தராமையா குற்றச்சாட்டு!  - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில்,நாங்கள் வாக்குறுதி அளித்தவற்றை நிறைவேற்றி இருக்கிறோம் ,ஆனால் 2018-ம் ஆண்டு 600 வாக்குறுதிகளை அளித்த பா.ஜ.க., அவற்றில் 10 சதவீதம் அளவுக்கு கூட நிறைவேற்றவில்லை என சித்தராமையா குறை கூறியுள்ளார்.

விஜயநகரா நகரில் நடந்த சமர்ப்பண சங்கல்ப பேரணியில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது,  2 ஆண்டுகளுக்கு முன், மக்களுக்குதேர்தல் அறிக்கையில் 593 வாக்குறுதிகள் இருந்தன. இதுவரை நாங்கள் 242 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்.

அடுத்த 3 ஆண்டுகளில் மீதமுள்ளவற்றையும் நிறைவேற்றுவோம் என கூறினார்.  ஓராண்டில் சக்தி யோஜனா திட்டம் நிறைவேற்றப்பட்டது. அடுத்து கிரஹ ஜோதி, அன்னபாக்யா, கிரக லட்சுமி மற்றும் யுவ நிதி என மொத்தம் 5 திட்டங்களை கொடுத்திருக்கிறோம். 

2013-ம் ஆண்டு, காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது. மொத்தம் அளித்த 165 வாக்குறுதிகளில் 158 வாக்குறுதிகளை நிறைவேற்றினோம். ஆனால், 2018-ம் ஆண்டு 600 வாக்குறுதிகளை அளித்த பா.ஜ.க. அவற்றில் 10 சதவீதம் அளவுக்கு கூட நிறைவேற்றவில்லை. அவர்கள் எப்போதும் பொய்களையே கூறுகின்றனர் என்றும் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The BJP is spreading lies Siddharamaiahs allegation


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->