மகன்களை கொன்ற தாய்! அடுத்தடுத்து பறிபோன மூன்று உயிர்கள்! தெலுங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்!
telangana mother kill own sons
ஹைதராபாத் புறநகரான கஜுலராமரம் பகுதியில், மனநிலை சீரல்லாததுடன் வாழ்ந்த பெண் தேஜா (35) தனது இரு பிள்ளைகளைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததையடுத்து, அடுக்குமாடியின் ஆறாவது தளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேஜா தனது கணவர், 11 வயது மகன் அர்ஷித் ரெட்டி மற்றும் 6 வயது ஆஷிஷ் ரெட்டியுடன் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
நேற்று மாலை 4 மணியளவில், இரண்டு மகன்களையும் கத்தியால் குத்தி படுகொலை செய்த பின்னர், தேஜா தானும் ஆறாவது மாடியில் இருந்து கீழே குதித்து உயிரிழந்தார்.
மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பான போலீசார் நடத்திய ஆரம்ப விசாரணையில், தேஜா நீண்ட நாட்களாக உடல் மற்றும் மனநலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், கணவருடன் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி, மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
telangana mother kill own sons