தேஜஸ் இரயில் தாமதம்.. இழப்பீடு கொடுத்த ஐ.ஆர்.சி.டி.சி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் அகமதாபாத் - மும்பை நகருக்கு இடையே தேஜஸ் விரைவு இரயில் செயல்பட்டு வருகிறது. இந்த இரயில் ஒருமணிநேரத்திற்கும் மேலாக தாமதமான காரணத்தால், பயணிகளுக்கு தற்போது ஐ.ஆர்.சி.டி.சி சார்பாக இழப்பீடு வழங்ப்பட்டுள்ளது. 

கடந்த புதன்கிழமையன்று அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட தேஜஸ் இரயில், சுமார் ஒன்றரை மணிநேரம் தாமதமாக மும்பைக்கு வந்துள்ளது. மேலும், அங்குள்ள புறநகர் பகுதியான பாய்ந்தர் மற்றும் தாஹிசார் இரயில் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் திடீர் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து இரயில் சுமார் ஒருமணிநேரம் நிறுத்திவைக்கப்பட்டு இருந்துள்ளது. மேலும், தேஜஸ் விரைவு இரயில் தாமதமாகும் பட்சத்தில் இழப்பீடு வழங்கப்படும் என்று முன்னதாகவே அறிவிக்கப்பட்டு இருந்தது. 

இதன் அடிப்படையில் இரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கு மொத்தமாக ரூ.63 ஆயிரம் இழப்பீடு தந்துள்ளது. மேலும், மும்பை - அகமதாபாத் இரயில் ஐ.ஆர்.சி.டி.சி நிர்வாகத்தால் இயக்கப்படும் இரண்டாவது தனியார் இரயில் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இரயில் தாமதமான விதிகளின் படி சுமார் ஒருமணிநேரம் தாமதமாகும் பட்சத்தில் ரூ.100 வழங்கப்படும் என்றும், இரண்டு மணிநேரம் தாமதமாகும் பட்சத்தில் ரூ.250 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tejas Express give penalty for train late Mumbai to Ahmedabad


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->