இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை..வேலை தேடி சென்றபோது நடந்த அதிர்ச்சி சம்பவம்!
Teenage girl gang-raped Shocking incident while looking for a job
வேலை தேடி சென்ற பட்டதாரி இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் மஞ்சேனஹள்ளியை சேர்ந்த பட்டதாரி இளம்பெண் வேலை தேடி சிக்பள்ளாப்பூர் டவுனுக்கு வந்துள்ளார். வேலை கிடைக்காத நிலையில் அவர் தனது சொந்த ஊருக்கு நடந்தே சென்றுள்ளார். அந்த சமயத்தில் அந்த வழியாக ஒருவர் ஸ்கூட்டரில் லிப்ட் கொடுத்து அழைத்து செல்வதாக கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய இளம்பெண்ணும் அவருடன் ஸ்கூட்டரில் ஏறி புறப்பட்டு சென்றுள்ளார்.
ஆனால் கவுரிபித்தனூர் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை வன்கொடுமை செய்துள்ளார்.
அதன்பிறகு புதிய ஆடை வாங்கி வருவதாக கூறி இளம்பெண்ணின் கம்மல்களை பறித்துக் கொண்டு அந்த நபர் ஸ்கூட்டரில் அங்கிருந்து சென்றுள்ளார். பின்னர் தனது நண்பரை அழைத்துக் கொண்டு வந்துள்ளார். இருவரும் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் விட்டு விட்டு 2 பேரும் தப்பிச் சென்றுள்ளனர்.
ஆனால் நடக்க முடியாமல் இளம்பெண் மயக்க நிலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் இருப்பதை பார்த்த ஷில்பா கவுடா என்ற பெண், சிக்பள்ளாப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். மேலும் அவர் இதுகுறித்து சிக்பள்ளாப்பூர் மகளிர் போலீசிலும் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதன்பிறகு அவரது நண்பரையும் போலீசார் பிடித்தனர். இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.விசாரணையில், கைதானவர்கள் சிக்பள்ளாப்பூர் டவுனை சேர்ந்த சிக்கந்தர் பாஷா, அவரது நண்பர் ஜனார்த்தனாச்சாரி ஆகியோர் என்பதும், மெக்கானிக்கான சிக்கந்தர் பாஷா தான் ஸ்கூட்டரில் லிப்ட் கொடுப்பதாக அழைத்து சென்று இளம்பெண்ணை முதலில் வன்கொடுமை செய்தும், பின்னர் அவரே தனது நண்பரான ஜனார்த்தனாச்சாரியை அழைத்து வந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
English Summary
Teenage girl gang-raped Shocking incident while looking for a job