பள்ளி வளாகத்தில் பார்ட்டி... சரக்குடன் அசைவு உணவு வழங்கிய ஆசிரியர் சஸ்பெண்ட்.! - Seithipunal
Seithipunal


மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பள்ளி வளாகத்தில் மது மற்றும் அசைவ உணவு பார்ட்டி வழங்கிய ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டம் கானியாதானா பிளாக்கிற்கு உட்பட்ட போட்டா கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடந்த பார்ட்டி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இதையடுத்து பள்ளி வளாகத்தில் மது மற்றும் அசைவம் உணவை விருந்தாக அளித்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆனால் பார்ட்டி எப்போது நடந்தது என்ற தகவல் வெளியாகவில்லை.

மேலும் பள்ளி வளாகத்தில் பார்ட்டி நடந்தபோது, அந்த ஆசிரியரும் குடிபோதையில் இருந்ததாகவும், அதை வீடியோ எடுத்த உள்ளுர்வாசிகளுடன் சண்டையிட்டதாகவும் பகுதியை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆசிரியரின் செயல், நடத்தை விதிகளை மீறுவதாக உள்ளது என்று வட்டார கல்வி அதிகாரி மற்றும் பிச்சோர் துணைக்கோட்ட வருவாய் அதிகாரி சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஆசிரியர் பள்ளி வளாகத்தில் இதுபோன்று விருந்துகளை தொடர்ந்து நடத்தியதாகவும் புகார்கள் வந்துள்ள நிலையில், இது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொண்டு சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Teacher suspended for hosting liquor and nonveg party in school premises in madhya pradesh


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->