கர்நாடகாவில் தமிழர் கொடூர கொலை... பழிக்குப்பழி?.. நடுரோட்டில் கொடூர சம்பவம்.! - Seithipunal
Seithipunal


தமிழக - கர்நாடக எல்லைப்பகுதி கிராமத்தை சார்ந்தவர், கர்நாடக மாநிலத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள ராம்நகர் மாவட்டம் கனகபுரா குனசனஹள்ளி கிராமம் தமிழக - கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் இருக்கிறது. தமிழக எல்லைப்பகுதியில் இருக்கும் கலிபாண்டே கிராமத்தை சார்ந்தவர் சங்கர் (வயது 35).

இவர் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் குனசனஹள்ளி கிராமத்தில் இருக்கும் மதுபான விடுதி முன்புறம் நின்று கொண்டு இருக்கையில், அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர், அவர்கள் வைத்திருந்த ஆயுதத்தால் சரமாரியாக சங்கரை தாக்கியுள்ளனர்.

மேலும், சங்கரின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி செல்லவே, அவர் படுகாயத்துடன் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய தொடங்கியுள்ளனர். 

விசாரணையில், சங்கர் மற்றும் அவரது நண்பர்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக சென்னகிருஷ்ணா என்ற நபரை கொலை செய்ததாக கூறப்படும் நிலையில், இதனால் பழிக்கு பழியாக கொலை அரங்கேறியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

சென்னகிருஷ்ணாவின் மகன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலையை அரங்கேற்றியுள்ளதாக சந்தேகிக்கப்படுவதால், அவர்களுக்கு வலைவீசப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக கோடிஹள்ளி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilnadu Karnataka Border Ramanagara District Tamil Person Murder by Gang Police Investigation


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->