நடுரோட்டில் இளம்பெண்ணை தாக்கிய ஸ்விக்கி ஊழியர்.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


காதலர்களுக்குள் ஏற்பட்ட சண்டையை தடுக்க வந்த உணவு டெலிவரி செய்யும் நபர் இளம்பெண்ணை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதிகள் பெண் ஒருவர் அவரது காதலனை சாலையில் வைத்து அடித்து தாக்கினார். அப்போது அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் பலர் இந்த சண்டையை வேடிக்கை பார்த்தபடி சென்றனர்.

அப்போது உணவு டெலிவரி செய்யும் நபர் ஒருவர் இளம்பெண்ணை சமாதானம் செய்ய முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்தப் பெண் அந்த இளைஞரையும் தகாத வார்த்தைகளில் திட்டவே கடுப்பான டெலிவரி ஊழியர் அந்தப் பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார்.

காதலியிடம் அடி வாங்கிய காதலன் பொறுமையாக இருந்த நிலையில், சமாதானம் செய்ய வந்த இளைஞரை வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டு அடி வாங்கிய பெண் நிலைகுலைந்து போனார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் இரு தரப்பினர் மீதும் வழக்கு செய்து செய்துள்ளனர்.

தற்போது இளம்பெண்ணை ஸ்விக்கி ஊழியர் அடித்து தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Swiggy worker beat women


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->