அபாயகரமான நிலையில் காற்றின் தரம் - 4 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


நாட்டின் தலைநகரான டெல்லியில் கடந்த சில தினங்களாக காற்று மாசு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. காற்றின் தரக்குறியீடு 450  புள்ளிகளுக்கு மேல் கடந்து அபாயகரமான பிரிவில் உள்ளது. இந்தக் காற்று மாசைக் குறைக்க டெல்லி அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதில், ஒரு பகுதியாக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்தக் காற்று மாசுபாடுக்கு பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதுதான் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், காற்று மாசு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுதன்சு துலியா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்  'பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க்கழிவுகளை எரிப்பதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். காற்று மாசை தடுப்பது நீதிமன்றத்தின் கடமை மட்டுமல்ல, அனைவரது கடமை’’ என்று தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

supreme court warned four states for air pollution


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->