குடும்பத் தலைவிகளின் பங்களிப்பை மதிப்பிட முடியாது - உச்ச நீதிமன்றம் அதிரடி.! - Seithipunal
Seithipunal


விபத்தில் உயிரிழந்த உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணிற்கு இழப்பீடு கேட்டு அவருடைய கணவர் தொடர்ந்த வழக்கில், மோட்டார் வாகன சட்டத் தீர்ப்பாயம், இந்தப் பெண், குடும்பத் தலைவியாக உள்ளதால், தினசரி கூலி வேலை செய்வோர் ஈட்டும் வருவாயைவிட குறைந்த தொகையை இழப்பீடாக அறிவித்தது. 

இந்தத் தீர்ப்பை எதிர்த்து பெண்ணின் கணவர் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரணை செய்த நீதிபதி, அதை உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தொடரபட்ட வழக்கை விசாரணை செய்த, நீதிபதிகள் சூரியகாந்த், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, வீட்டு வேலைகளை கவனிக்கும் பெண்கள் மிகவும் உயர்வானவர்கள். அவர்களது பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியாது; அதை பணத்தால் மதிப்பிடவும் முடியாது.

வேலைக்குச் செல்லும் பெண்களைவிட, குடும்பத் தலைவியின் பணிகள் குறைந்தது அல்ல. அவர்கள் குடும்பத்துக்காக செலவிடும் நேரத்தை, பணத்தால் கணக்கிட இயலாது. அது மதிப்பிட முடியாத பங்களிப்பாகும். இந்த விஷயத்தில், தினக்கூலி வேலை செய்பவர்களைவிட குறைந்த அளவுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாது. 

அந்தப் பெண், குடும்பத் தலைவிதான் என்று கூறப்பட்டுள்ளதையும் ஏற்க முடியாது" என்று கருத்து தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்தப் பெண்ணின் குடும்பத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட, இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீட்டை, ஆறு லட்சம் ரூபாயாக உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

supreme court rise compensation to utrakhant woman died family


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->