கொரோனவினால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு எப்போது?! உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!  - Seithipunal
Seithipunal


கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து, தலா ரூ.50,000 வழங்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்தியாவில் ஒட்டுமொத்த உயிரிழப்பு 5,25,760 ஆக உள்ள நிலையில், தினம் தினம் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. 

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்குவதில் மாநில அரசுகள் கால தாமதம் செய்வதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் நேற்று உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் பி.வி.நாகரத்னா அடங்கிய அமர்வு, இழப்பீடு கிடைக்காதவர்கள் மற்றும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் குறைதீர் குழுவிடம் புகார் தெரிவிக்கலாம் எனவும், இதுபோன்ற புகார்களுக்கு 4 வாரங்களுக்குள் தீர்வு காண வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

supreme court judgement of Covid dead relief fund


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->