'எரிசக்தியைத் சேமிக்கத் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்'; பெட்ரோலியத் துறை இணை செயலாளர் வேண்டுகோள்..! - Seithipunal
Seithipunal


ஈரான் போர் காரணமாக உலக நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த சூழலில் நாட்டின் மீது அதிகரித்து வரும் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் நோக்கில் எரிசக்தியைத் சேமிக்கத் தேவையான அனைத்து மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட  பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா அழைப்பு விடுத்துள்ளார். 

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சுஜாதா சர்மா மேலும் குறிப்பிட்டுள்ளதாவது; மேற்கு ஆசிய நெருக்கடி காரணமாக எரிசக்தி விநியோகத்தில் சர்வதேச அளவில் தடைகள் ஏற்பட்டுள்ளன என்பது அனைவரும் அறிந்ததுதான். இதனால், சர்வதேச சந்தையில் விலைகளின் ஏற்ற இறக்கம் அதிகரித்து காணப்படுகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மூலம், எரிபொருள் விநியோகம் சாமானிய நுகர்வோருக்கு குறைந்தபட்ச சிரமத்துடன் சென்றடைவதை உறுதி செய்ய முயன்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், நமது (இந்தியா) கச்சா எண்ணெய் இருப்பு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறதாகவும், நமது சுத்திகரிப்பு நிலையங்கள் முழு திறனுடன் இயங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எந்தவொரு சில்லறை விற்பனை நிலையத்திலும் எரிபொருள் தீர்ந்துபோனதாக தகவல் இல்லை என்றும், பெட்ரோல், டீசல் ஆகியவை போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும், வீட்டு உபயோகத்துக்கான எல்பிஜி விநியோகமும் தடையின்றி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், கடந்த மூன்று நாட்களில் ஒரு கோடியே 26 லட்சம் எல்பிஜி முன்பதிவுகளுக்கு 1.14 கோடி எல்பிஜி சிலிண்டர்கள் வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், இதேபோல், வணிக ரீதியிலான எல்பிஜி விற்பனை கடந்த மூன்று நாட்களில் 17,000 டன்களைத் தாண்டியுள்ளது என்றும், வாகனங்களுக்கான எல்பிஜி (Auto LPG) விற்பனையும் 762 டன்களைக் கடந்துள்ளதாகவும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.


அத்துடன், நாட்டின் அனைத்து குடிமக்களும் பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளுமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள  சுஜாதா சர்மா, சாத்தியமான இடங்களில் எல்லாம் மெட்ரோ ரயில் மற்றும் பொதுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்துங்கள் என்றும், ஒரே வாகனத்தில் பலரும் பயணிக்கும் முறையைத் தேர்ந்தெடுக்குமாறும், சரக்கு போக்குவரத்துக்கு ரயில்வையை முதன்மை போக்குவரத்து முறையமாகக் கருதுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், சாத்தியமான இடங்களில் எல்லாம் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க கூறியும், நாட்டின் மீது அதிகரித்து வரும் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் நோக்கில் எரிசக்தியைத் சேமிக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று பொதுக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sujatha Sharma appeals to everyone to join hands and work together to conserve energy


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->