ஜார்க்கண்ட் சட்டப்பேரவை நோக்கி பேரணியாக சென்ற மாணவர்கள்; தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு நடத்திய போலீசார்..! - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்​சி​யில் நேற்று சட்​டப்​பேரவை நோக்கி பேரணி​யாக சென்ற மாணவ, மாண​வியர் மீது போலீஸார் தடியடி மற்றும் கண்​ணீர் புகைக்​குண்​டு​களை வீசினர். இதில் பலர் காயமடைந்​துள்ளனர்.

ஜார்க்​கண்ட் அரசு பணி​யாளர் தேர்​வாணைய முறை​கேடு தொடர்பாக  தலைநகர் ராஞ்​சி​யில், கடந்த ஜூலை 25-ஆம் தேதி முதல் மாணவ, மாண​வியர் உண்​ணா​விரத போராட்​டத்தை தொடங்கினர். மாணவர் சங்​கத்​தின் மூத்த தலை​வர்​கள் தேவேந்​திர நாத் மஹதோ (33), ராகுல் கிராந்தி (40), ரூபேஷ் குமார் பால் (30), சவிதா குமாரி (28), ஹபிபா (27) ஆகியோர் போராட்​டத்தை முன்​னின்று நடத்தி வரு​கின்​றனர். அத்துடன், இவர்​கள் 05 பேரும் தொடர் உண்​ணா​விரதம் மேற்​கொண்டு வரு​கின்​றனர்.

இவ்வாறு போராட்​டத்​தில் ஈடு​பட்​டிருக்​கும் மாணவர் சங்​கப் பிரதிநிதிகளுடன் மாநிலத்தை ஆளும் ஜார்க்​கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) அரசு 06 சுற்று பேச்​சு​வார்த்​தைகளை நடத்தியுள்​ளது. ஆனால், இது​வரை எந்த உடன்​பாடு எட்​டப்​பட​வில்​லை. அத்துடன், மாணவர்​களை சமா​தானப்​படுத்த ஜார்க்​கண்ட் அரசு பணி​யாளர் தேர்​வாணை​யத்தை சேர்ந்த சிலர் பணி நீக்​கம் செய்​யப்​பட்டுள்​ளனர்.

அதேநேரம், குற்​றம் சாட்​டப்​பட்​ட​வர்​கள் மீது வழக்​கு​களும் பதிவு செய்​யப்​பட்டுள்​ளன. இந்த சூழலில் ஜார்க்​கண்ட் அரசு பணி​யாளர் தேர்​வாணை​யத்​தின் முன்​னாள் தலை​வர் கியாங்டே நேற்று கைது செய்​யப்​பட்​டார். 

ஜார்க்​கண்ட் சட்​டப்​பேர​வை​யின் மழைக்​கால கூட்​டத் தொடர் தற்போது நடை​பெற்று வருகிறது. இந்நேரத்தில் ஆயிரக்​கணக்​கான மாணவர்​கள் ராஞ்​சி​யில் நேற்று சட்​டப்​பேரவை நோக்கி பேரணி​யாக சென்​றனர். அப்போது அவர்கள் போலீஸ் தடுப்​பு​களை தாண்ட, சட்​டசபை வளாகத்​திற்​குள் முன்​னேறினர். அப்போது சிலர் போலீ​ஸார் மீது பாட்​டில்​கள், காலணி​களை வீசி தாக்குதலும் நடத்தினர்.

பேரணியில் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், மாணவர்​களை தடுத்து நிறுத்த போலீ​ஸார் முதலில் தண்​ணீரை பீய்ச்சி அடித்​தனர். ஆனால், அவர்​கள் கலைந்து செல்​லாமல் நடனம் ஆடினர். இதைத் தொடர்ந்து போலீஸார் தடியடி நடத்தி கண்​ணீர் புகைக்​குண்​டு​களை வீசினர். இதில் ஏராள​மான மாணவர்​கள் காயமடைந்​துள்ளதோடு, காவல்​துறையினர் 04 பேர் காயமடைந்​துள்ளனர்.

இதுகுறித்து அம்மாநில மாணவர் சங்க தலை​வர் தேவேந்​திர நாத் மஹதோ கூறியதாவது;

''மாணவர்​களின் போராட்​டத்தை ஒடுக்க முதல்​வர் ஹேமந்த் சோரன் தலை​மையி​லான அரசு தடியடி நடத்​துகிறது. கண்​ணீர் புகைக்​குண்​டு​களை வீசுகிறது. இந்த அடக்குமுறைகளுக்கு அஞ்ச மாட்​டோம். எங்​களது கோரிக்​கைகள் நிறைவேறும் ​வரை போராட்​டத்தை தொடரு​வோம்''என்று தெரிவித்​துள்ளார்.

அதேநேரத்தில் ஜார்க்​கண்ட் அரசு தரப்பில் ''மாணவர்​கள் தரப்பில் 06 கோரிக்​கைகள் முன்​வைக்​கப்​பட்​டன. அதில், 04 கோரிக்​கைகள் நிறைவேற்​றப்​பட்டுள்​ளன. தொடர்ந்​து் பேச்சுவார்த்தையும்​ நடத்​தப்​பட்​டு வரு​கிறது''என்​று தெரிவிக்கப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Students marching towards Jharkhand Assembly lathi charged and tear gas fired


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->