'அம்பலமாகும் பாஜக-காங்கிரஸ் நாடகம்'; பினராயி விஜயன் மீதான அமலாக்கத்துறை சோதனை; ஸ்டாலின், கெஜ்ரிவால் கண்டனம்..!
Stalin and Kejriwal Strongly Condemn the Raids on Pinarayi Vijayan
கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் தோழர் திரு. பிரனாயி விஜயன் அவர்களுக்கு எதிரான அமலாக்கத்துறை ரெய்டுகளை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளை ஏவிவிடும் இத்தகைய போக்கு மிகவும் தவறானது.
"திரு. பினராயி விஜயன் அவர்கள் ஏன் இதுவரை பா.ஜ.க.வால் குறிவைக்கப்படவில்லை?" எனப் பொறுப்பற்ற முறையில் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த சில காங்கிரஸ் தலைவர்களின் கூற்றுகள் பொருளற்றவை என்பதையும் இந்த ரெய்டுகள் அம்பலப்படுத்தியுள்ளன'' என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்ததாக, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர், அரவிந் கெஜ்ரிவால் பினராயி விஜயன் மீதான சோதனைக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
''அம்பலமாகும் பாஜக-காங்கிரஸ் நாடகம்!
பினராயி விஜயன் மீதான சோதனைக்குக் கடும் கண்டனம்!
முன்னாள் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு எதிரான அமலாக்கத் துறையின் சோதனையானது, பிராந்திய எதிர்க்கட்சிகளை குறிவைப்பதற்கும் ஜனநாயகத்தை சீர்குலைப்பதற்கும் பாஜக மத்திய முகமைகளை மீண்டும் ஒருமுறை வெளிப்படையாகத் தவறாகப் பயன்படுத்திய செயலாகும்.
பாஜக-காங்கிரஸ் இடையேயான உறவு குறித்து 'நடவடிக்கை எடுக்கவில்லை' என்று காங்கிரஸ் புகார் கூறத் தொடங்கிய உடனேயே, அமலாக்கத் துறை இந்தச் சோதனையை நடத்தியிருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது" என குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Stalin and Kejriwal Strongly Condemn the Raids on Pinarayi Vijayan