முதல்வர் விஜய்யின் டெல்லி பயணத்தில் சந்திக்கவிருக்கும் முக்கிய தலைவர்கள்..? - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் விஜய் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் அளித்தார். தமிழக முதல்வராக நடிகர் விஜய் பொறுப்பேற்ற பின்னர், முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக இன்று காலை டெல்லிக்கு சென்றார். 

இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள அவருக்கு, அங்கு டெல்லி தமிழ்நாடு இல்லத்தில், தமிழக தலைமைச் செயலர் சாய் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து, காவல் துறை அணிவகுப்பு மரியாதையும் விஜய்க்கு வழங்கப்பட்டது.

அதன் பின்னர், பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது வலியுறுத்த வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட விஜய், அவர் பிரதமரைச் சந்திக்க புறப்பட்டுச் சென்றார்.

பிரதமர் மோடியைச் சந்தித்த முதல்வர் விஜய், அவருக்கு பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த சந்திப்பு புதிதாக கட்டப்பட்டுள்ள சேவா தீர்த் அலுவலகத்தில் நடைபெற்றது. சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பில் இருவரும் தமிழ்நாடு மற்றும் தேசிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். 

குறிப்பாக, மேகேதாட்டு அணை, இருமொழி கொள்கை, அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கான பிஎம்ஸ்ரீ திட்ட நிதி, தமிழகத்துக்கு நிலுவையில் உள்ள மத்திய நிதி, தமிழகத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சி மேம்பாடு உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் விஜய், பிரதமர் மோடியிடம் நேரில் வழங்கியுள்ளார்.

பிரமர் உடனான சந்திப்பு நிறைவடைந்ததை அடுத்து விஜய் மீண்டும் தமிழ்நாடு இல்லத்துக்கு திரும்பினார். அடுத்ததாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் முதல்வர் விஜய் சந்திக்கவுள்ளார்.

முதல்வரின் இந்த டெல்லி பயணத்தின்போது காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தியையும் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பேபி ஆகியோரையும் விஜய் சந்திப்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief Minister Vijay meets Prime Minister Narendra Modi in Delhi


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->