'நமது நாட்டில், ஆன்மீகம் என்பது ஒரு வாழ்க்கை முறை': சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி..! - Seithipunal
Seithipunal


நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக, பாஜக தலைமையிலான கூட்டணி சார்பில் ஜெகதீப் தன்கர் 2022 ஆகஸ்ட் மாதம் பொறுப்பு ஏற்றார். அவர், குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக,குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு திடீரென கடிதம் அனுப்பினார். மருத்துவர்களின் ஆலோசனையின் படி ஓய்வு எடுக்க வேண்டும் என்பதால் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், இந்தியாவின் புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், வரும் செப்டெம்பர் 09-ஆம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. 

இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்தவரும், மஹாராஷ்டிரா ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து எதிர்கட்சிகளில் வேட்பாளராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி. சுதர்ஷன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று சி.பி.ராதாகிருஷ்ணன், ஸ்ரீ சித்திவிநாயகர் கோயிலில் பிரார்த்தனை செய்த நிலையில், பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 'நமது நாட்டில், ஆன்மீகம் என்பது ஒரு வாழ்க்கை முறை.நமது நாட்டில் ஆன்மீகம் ஊக்குவிக்கப்படுகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 'மும்பை மற்றும் மகாராஷ்டிராவில், விநாயகர் சதுர்த்தியை நாங்கள் பிரமாண்டமாக கொண்டாடுகிறோம். அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். நமது தேசம் முன்னேற வேண்டும். இதற்கு விநாயகர் அருள் புரிய வேண்டும்'என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Spirituality is a way of life in our country says CP Radhakrishnan


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->