பருத்தி விலை உயர்வால் தத்தளிக்கும் நூற்பாலைகள்..! - Seithipunal
Seithipunal


இறக்குமதி செய்யும் பருத்தியின் விலை அதிரடியாக உயர்ந்ததால், அவற்றை வாங்கி நுாற்பு செய்ய முடியாமல் நுாற்பாலைகள் தத்தளிக்கின்றன.

கோவையில், 200க்கும் மேற்பட்ட நுாற்பாலைகள் உள்ள நிலையில், தற்போது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நீண்டஇழை கொண்ட பருத்தி ஒரு கேண்டி (355 கிலோ) 1.05 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், நுாற்பாலைகள் அனைத்தும் செயல்படாமால் போய்விடும். யூக வணிகர்கள் இச்சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதற்காக, இருப்பு வைத்துள்ள தரமான நம் நாட்டு பஞ்சை, மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்ய முயற்சிக்கின்றனர். இதற்கு தடை விதித்து, நுாற்பாலைகளை இயக்க முயற்சி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுபற்றி தென்னிந்திய நுாற்பாலைகள் (சிஸ்பா) சங்க தலைவர் செல்வன், ''மல்டி கமாடிட்டி எகஸ்சேஞ்ச் ஆப் இந்தியா தளத்திலிருந்தும், அந்த வர்த்தகத்திலிருந்து பருத்தியை அகற்ற வேண்டும்,'' என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

spinning mills reeling due to rising cotton prices


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->