முடிவுக்கு வந்த சோனம் வாங்க்சுக் உண்ணாவிரதம்; ஸ்கெச் போட்டு தூக்கிய டெல்லி போலீசார்..! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வு வினாத்தாள் கசிவு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கடந்த ஒரு மாத காலமாக, டெல்லி ஜந்தர் மந்தரில் இணையத்தில் உருவாக்கப்பட்ட கரப்பான் பூச்சி கட்சி (CJP) போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.

அவரது, போராட்டம் இன்றுடன் 21-வது நாளை எட்டியிருந்த நிலையில், பல அரசியல் தலைவர்களுக்கு அவரது உடல்நிலை மோசமாவதால உண்ணாவிரதத்தை கைவிட வேண்டுமென வலியுறுத்தி வந்தனர். ஆனாலும் அவர்விடாப்பிடியாக உண்ணாவிரதத்தை தொடர்ந்து வந்தார்.

இந்த சூழலில்,மருத்துவப் பரிசோதனையில், அவர் 09 கிலோ வரை எடை குறைந்திருப்பதாகவும், உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, ஜூலை 20 நடைபெறும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தை முற்றுகையிட பேரணி நடத்தவும் தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். 

இந்நிலையில், சோனம் வாங்சுக்கிற்கு உரிய மருத்துவ பரிசோதனை அளிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இதைக் கருத்தில்கொண்டு, நாடாளுமன்ற முற்றுகைக்கு இன்னும் 02 நாட்களே இருக்கும் நிலையில், இன்று சோனம் வாங்சுக் டெல்லி காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

டெல்லி தகவல்களின்படி, புதிதாக நியமிக்கப்பட்ட டெல்லி காவல்துறை ஆணையர் அனுராக் குமார் பதவியேற்ற உடனேயே நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது இந்த திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, சம்பவ இடத்தில் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும் காலை நேரத்தில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள மூத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, வாங்சுக்கின் நெருங்கிய கூட்டாளியான அபிஜீத் திப்கே வெளியே சென்ற நேரத்திலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, இன்ஸ்பெக்டர் பதவிக்குக் கீழுள்ள உள்ளூர் காவல் துறையினர் மற்றும் சிறப்புப் படையினர் என 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களுக்கு இதுகுறித்து எந்த அறிவிப்புகளையும் முன்கூட்டியே கூறவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சோனம் வாங்சுக் உடனிலை குறித்து மருத்துவ ஆலோசனையின் பேரிலும், டெல்லி உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்கவும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sonam Wangchuks hunger strike ended due to the Delhi Polices crackdown


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->