நடக்க முடியாமல் அவதி அடைந்த தாய்.! மகன்-மருமகள் செய்த காரீயம்.! ஆந்திராவில் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


ஆந்திர பிரதேச மாநிலத்தில் நடக்க முடியாமல் அவதி அடைந்த தாயைக் கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் அடைத்து வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர பிரதேசம் மாநிலம் அமடபாகுலா பகுதியை ராமுலு. இவரது மனைவி சிவமணி. இவர்களுடன் ராமுலுவியின் தாய் சங்கரம்மா(64) வசித்து வந்தார். இந்நிலையில் சங்கரம்மாவுக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளது. இதனால் அவர் நடக்க முடியாமல் இருந்துள்ளார். இதையடுத்து, அவரது உடல்நிலை சரியாகாததால் ராமலு, அவரது மனைவியுடன் சேர்ந்து நேற்று முன்தின இரவு தூங்கிக் கொண்டிருந்த தாயின் கழுத்தை கொடூரமாக நெரித்து கொலை செய்துள்ளார்.

பின்பு தாயின் உடலை தூண்டுதுண்டாக வெட்டி வீட்டின் முன் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்துள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர், சங்கரம்மாவைப் பற்றி ராமலுவிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் சரியாக பதில் அளிக்கவில்லை என்பதால் சந்தேகமடைந்த அவர்கள், இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில், தாய் நடக்க முடியாமல் அவதி அடைந்ததால் கொலை செய்து தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்திருப்பதாக போலீசாரிடம் ராமலு தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் சங்கரம்மாவின் உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார், ராமுலு மற்றும் அவரது மனைவி சிவமணியை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Son and daughter in law arrested for murder mother dismembering her body and hiding it in a water tank in Andhra


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->