பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா, வாட்சப்பை தடை செய்ய இந்திய அளவில் கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


சமூக வலைதள செயலிகளின் பயன்பாடு மக்களிடையே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் எங்கோ ஓர் இடத்தில் நடக்கும் விஷயங்களை உடனுக்குடன் தெரிந்து வருகின்றனர். இணைய செயலிகள் வாயிலாக பல தகவல்களை மக்கள் அறிந்து வந்தாலும், போலியான மற்றும் பொய்யான தகவல் அதிகளவு பரவி வருகிறது. 

மேலும், சமூக வலைதள செயலிகள் வாயிலாகவும், இணையவழி விளையாட்டுகள் மூலமாகவும் மக்களின் தனிப்பட்ட தகவல் திருடப்படுகிறது என்று அரசு முடிவு செய்து, பல்வேறு செயலிகளுக்கு தடை விதித்தது. குறிப்பாக சீன தயாரிப்பு செயலிகளாக இருந்து வரும் செயலிகள் அதிரடியாக இந்தியாவில் தடை செய்யப்பட்டது. 

தற்போது, இந்தியாவை பொறுத்த வரையில் முகநூல், வாட்சப், இன்ஸ்டாகிராம், டெலகிராம் செயலிகள் முன்னணியில் இருந்து வரும் நிலையில், இந்தியாவில் நடைபெறும் போராட்டங்கள் தொடர்பான விஷயங்களில் மேற்கூறிய செயலிகள் மிகுந்த பாதிப்பை சந்தித்தது. 

மேலும், மத்திய அரசின் விதிமுறைகளுக்கு கட்டுப்படாத எந்த ஒரு செயலியாக இருந்தாலும், அது தடை செய்யப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. ட்விட்டர் மற்றும் முகநூல் நிறுவனம் டெல்லி போராட்டம் தொடர்பான சர்ச்சையில் சிக்கி, அது எப்போது வேண்டும் என்றாலும் தடை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில் இருக்கிறது. 

மேலும், மத்திய அரசின் டிஜிட்டல் விதிகளுக்கு உட்படாத எந்த நிறுவனமும் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின்னர் தடை செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், இன்று நேற்று முதலாகவே நெட்டிசன்கள் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்த நிலையில், இன்று இன்ஸ்டாக்ராமையும் தடை செய்ய வேண்டும் என ஹாஷ்டேக் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Social Media Handlers Trend about ban Twitter Facebook WhatsApp Instagram in India 26 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->