சும்மா இருந்திருக்கலாம்...! பாக்கெட்ல 'ஸ்நாக்ஸ்' இருக்கும்னு பார்த்தா 'ஸ்நேக்' இருக்கு! - தொழிலாளியின் கையை பதம் பார்த்த கொடிய விஷ பாம்பு...!
snake in the pocket deadly poisonous snake bite worker hand
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 28 வயதுடைய அமிதுல் இஸ்லாம் என்பவர், தினக்கூலி தொழிலாளியாக கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தில் தங்கி வேலை செய்து வந்தார்.
அதிர்ச்சியூட்டும் விதமாக, அவர் ஒரு விஷப்பாம்பை தனது பேண்ட் பாக்கெட்டில் சுருட்டி வைத்து கொண்டு, ஒதாயி பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கு சுமூகமாக நடந்து சென்றுள்ளார்.

அங்கு அமைதியாக அமர்ந்து டீ அருந்திக் கொண்டிருந்த அவர், அருகில் இருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில், தன் பாக்கெட்டிலிருந்த பாம்பை வெளியில் எடுத்து காட்டினார்.ஆனால் இந்த விளையாட்டுத்தனமான செயல் எதிர்பாராத விபரீதமாக மாறியது. திடீரென சினந்த அந்த விஷப்பாம்பு, அமிதுல் இஸ்லாமை பலமுறை கடித்து தாக்கியது.
அதிர்ச்சியடைந்த அங்கிருந்தோர் உடனடியாக அவரை மீட்டு, மஞ்சேரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன், மலப்புரம் வனத்துறையினர் விரைந்து வந்து, தொழிலாளியை கடித்த விஷமுள்ள ‘கண்ணாடி விரியன்’ பாம்பை பாதுகாப்பாக பிடித்து சென்றனர்.
மேற்கொண்ட விசாரணையில், அமிதுல் இஸ்லாம் மது போதையில் இருந்தபோது பாம்பை தனது பாக்கெட்டில் வைத்து கொண்டு வந்ததும், அதை சிரிப்பூட்டும் நிகழ்வாக நினைத்து மற்றவர்களுக்கு காட்டியபோது இந்த விபத்து ஏற்பட்டதும் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
snake in the pocket deadly poisonous snake bite worker hand