திடீரென பறந்து வந்த பாம்பு.. திகைத்து.. சிதறி ஓடிய மக்கள்.!  - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் இருக்கின்ற உடுப்பி அருகில் அமைந்துள்ள பர்காலா மார்க்கெட்டில் எப்போதும் பொருட்கள் வாங்க நிறைய மக்கள் கூட்டமானது அலைமோதிக்கொண்டே இருக்கும்

அதுபோல சம்பவ தினத்திலும் மக்கள் கூட்டம் இப்படி தான் அலைமோதியது. அப்போது அங்கே ஒரு பறக்கும் பாம்பு ஒன்று அனைவரையும் பதர வைத்தது. நகராட்சிக்கு உரிமையான கட்டடத்திற்கு அருகில் அமைந்து இருக்கின்ற சலவை நிலையத்திற்கு எதிரில் மரத்திலிருந்த அந்த பாம்பு தரையில் விழுந்துள்ளது.

சுமார் 2 1/2 அடி நீளம் கொண்ட அந்த பாம்புடைய உடலில் கருப்பு, வெள்ளை கோடுகளும் சிவப்பு நிற புள்ளிகளும் இருந்துள்ளன. அது அதிக விஷம் கொண்ட பாம்பு என்று அனைவரும் அச்சமடைய ஆரம்பித்துள்ளனர். இருப்பினும், இந்த வகை பாம்புகள் விஷத்தன்மையற்றவை என்று பாம்பு வல்லுநர் குருராஜ் சனில் கூறியுள்ளார்..

சுமார் 10 அடி முதல் 15 அடி வரை ஏறும் திறன் கொண்டுள்ள இந்த வகை பறக்கும் பாம்புகள், அங்கிருந்து தரையில் குதிக்கக்கூடியது. மேலும், இவ்வகை பாம்புகளானத்ய் சிறப்பாக மரமும் ஏறக்கூடியவையாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Snake Flying In Karnataka market


கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?
Seithipunal