மகளையே திருமணம் செய்த 62 வயது தந்தை - வலைத்தளத்தில் வைரலாகும் போலி வீடியோ.! - Seithipunal
Seithipunal


இந்து கடவுள் பிரம்மாவை பின்பற்றி தனது மகளையே முதியவர் ஒருவர் திருமணம் செய்ததாக வைரலான வீடியோ உண்மை இல்லை என தற்பொழுது தெரிய வந்துள்ளது. 

சில நாட்களுக்கு முன்பு இந்துக் கடவுள் பிரம்மாவை பின்பற்றி தனது மகளையே 62 வயது முதியவர் ஒருவர் திருமணம் செய்து கொண்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

அந்த வீடியோவில் உள்ள முதியவரும், இளம் பெண்ணும் மாலையுடன் நிற்கும் காட்சி இடம் பெற்று இருந்தது. இந்த வீடியோவை முதலில் ட்ரோல் என்ற டுவிட்டர் கணக்கில் கடந்த டிச.25ம் தேதி பதிவிடப்பட்டு இருந்தது.

இதற்கு முன்பாக இதே வீடியோ டெக்பரேஷ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிச.17ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அதேபோன்று பரேஷ் சதாலியா என்ற யூடியூப் பக்கத்திலும் இந்த வீடியோ காணப்பட்டது. 

டெக்பரேஷ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளம் பெண்ணை முதியவர் திருமணம் செய்த வீடியோ மட்டும் இல்லாமல் மூதாட்டி ஒருவர் இளைஞரைத் திருமணம் செய்துபோன்ற வீடியோவும், இரண்டு பெண்கள் ஒரு ஆணை திருமணம் செய்வது போன்ற வீடியோவும் பதிவிடப்பட்டுள்ளது.

இப்படி திருமணம் தொடர்பான வீடியோக்கள் அந்த குறிப்பிட யூடியூப் பக்கத்தில் அதிகமாக காணப்படுகிறது. தற்போது பரப்பக்கூடிய இந்த வீடியோவில் இருக்கும் பெண் வேறொரு வீடியோவில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. அதில் இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொள்வது போல காட்சி அமைந்துள்ளது. 

இதன் மூலம் தனது மகளையே முதியவர் ஒருவர் திருமணம் செய்வதுபோன்று இருக்கும் இந்த வீடியோ திட்டமிட்டு வைரல் செய்யப்பட்டது என்பது தெளிவாகிறது. இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sixty two years old father married daughter vedio viral in social medias


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->