கனமழை : சிக்கிம்-மேற்கு வங்கம் இடையே நிலச்சரிவு.! போக்குவரத்து நெரிசலில் சுற்றுலாப் பயணிகள்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் தற்போது கனமழை பெய்து வருவதால் சிக்கிம்-மேற்கு வங்கம் உள்ளிட மாநிலங்களுக்கு இடையே நிலச்சரிவு ஏற்பட்டு சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. 

சிக்கிம் மாநிலத்தில் கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிங்டாமில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவினால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதனால், இதுவரை ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் நெரிசலில் சிக்கித் தவித்து வருகின்றனர். இதனால், திங்கட்கிழமை காலைக்குள் நிலச்சரிவு அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

நிலச்சரிவு காரணமாக காங்டாக் மற்றும் மேற்கு வங்கம் இடையே சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டு, 10ல் இரண்டு இடங்களில் பெரிய பாறைகள் விழுந்துள்ளன. இவற்றை அகற்ற ஒரு நாள் முழுவதும் ஆகும் என்பதால், ஆகவே சிலிகுரிக்கு செல்பவர்கள் மேற்கு வங்க எல்லைக்கு செல்வதற்கு  பாக்யோங் வழியாக செல்லும் சாலைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வடக்கு வங்காளம் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sikkim westbengal landslide


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->