வெற்றி பெற்றால்.... அம்மா உணவகம்: பா.ஜ.க அதிரடி வாக்குறுதி.! - Seithipunal
Seithipunal


சிக்கிம் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலோடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. 32 சட்டமன்ற தொகுதிகளும் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ள சிக்கிம் மாநிலத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 

பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெறு வரும் நிலையில், பா.ஜ.க மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. 

இதற்கிடையே பா.ஜ.க சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குறுதியை வெளியிட்டுள்ளது. அதாவது, முழுவதும் பெண்களால் நடத்தக்கூடிய வகையில் அம்மா உணவகம் என்ற பெயரில் அரசு உணவகம் தொடங்கப்படும் என அறிவித்துள்ளது. 

மேலும் தமிழகத்தில் அ.தி.மு.க அரசு அமைத்தது போல மலிவு விலையில் அம்மா உணவகம் செயல்படும் எனவும் பா.ஜ.க அறிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sikkim BJP Manifesto


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->