அம்பானி நிறுவனத்துக்கு அதிரடித் தாக்கு: 13 கணக்குகள் முடக்கம் – தேசிய நெடுஞ்சாலை நிதி மோசடி வழக்கில் அடுத்த கட்டம்...!
Shocking blow Ambani company 13 accounts frozen next stage national highway fund fraud case
அனில் அம்பானியின் ஆர்–இன்ஃப்ரா நிறுவனம், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கான கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தப்பட வேண்டிய அரசுப் பணத்தை மோசடி செய்து வெளிநாட்டுக்கு மாற்றியதாகக் கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் உருவாக்கப்பட்ட போலி நிறுவனத்தின் துணை ஒப்பந்தம் வழங்கியதாகத் தோற்றம் ஏற்படுத்தி இந்த நிதி முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு வலுப்பெற்றுள்ளது.

இந்த முறைகேட்டுக்கான விசாரணையைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை (ED) அன்னியச் செலாவணி மீறல் சட்டத்தின் கீழ் ஆர்–இன்ஃப்ராவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
விசாரணையின் ஒரு பகுதியாக, நிறுவனத்தின் 13 வங்கிக் கணக்குகளை முடக்கி ED நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த கணக்குகளில் இருந்த ரூ.54.82 கோடி தொகையும் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த வழக்கில் கடந்த மாதம் அனில் அம்பானிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர் விசாரணைக்கு முன்னிலையாகத் தவறியதும் தற்போது அதிக கவனம் ஈர்த்துள்ளது.
English Summary
Shocking blow Ambani company 13 accounts frozen next stage national highway fund fraud case