ஐயோ பாவம்! கேரளாவில் அதிர்ச்சி! பூனையின் நகம் கீறியதால் உயிரிழந்த சிறுமி! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


கேரளாவில் பத்தினம்திட்டா மாவட்டத்தில் பந்தளம் பகுதியை சேர்ந்த தம்பதி அஷ்ரப் மற்றும் சஜினா. இந்த தம்பதிகளுக்கு ஹன்னா பாத்திமா என்ற 11 வயது மகள், அந்த பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள்.மேலும், சிறுமியின் வீட்டில் ஒரு பூனை வளர்த்து வந்தனர். இந்நிலையில், சம்பவத்தன்று அந்த பூனையின் நகம் பட்டு சிறுமி ஹன்னா பாத்திமா காயமடைந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறுமிக்கு ரேபிஸ் தடுப்பூசி முதல் தவணை அடூர் தாலுகா மருத்துவமனையில் போடப்பட்டது.அதில் பந்தளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறுமிக்கு 2 -வது தவணை தடுப்பூசி போடப்பட்டது. அதன்பிறகு வீடு திரும்பிய சிறுமி ஹன்னா பாத்திமாவுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து சிறுமி மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.அங்கு உடல்நிலை மேலும் மோசமானதை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறுமி மாற்றப்பட்டாள். அங்கு சிகிச்சை பெற்ற வந்த நிலையில் சிறுமி ஹன்னா பாத்திமா திடீரென உயிரிழந்துவிட்டார்.

மேலும், பூனையின் நகக்கீறலுக்கு ரேபிஸ் தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில், சிறுமி பலியானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.மேலும், ரேபிஸ் பாதித்து அவர் இறந்திருக்கக்கூடும் என்ற கருதப்படுகிறது. ஆனால் பூனையின் நகக்கீறல் காரணமாக சிறுமி இறந்திருக்க வாய்ப்பில்லை என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே டெங்கு அல்லது நிபா பாதிப்பு காரணமாக சிறுமி ஹன்னா பாத்திமா இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.அதுமட்டுமின்றி, சிறுமி எப்படி இறந்தார்? என்பதை கண்டறிய அவரது உடலில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கின்றன. மேலும், பரிசோதனை முடிவு வந்தால் தான், சிறுமி எப்படி இறந்தார்? என்பது தெரியவரும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shock in Kerala Little girl dies after being scratched by cats claw What happened


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->