டெல்லியில் அதிர்ச்சி! ISIS தொடர்பு உடைய 2 பேர் கைது...! -வெடிபொருட்கள் பறிமுதல் - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லி மற்றும் மத்திய பிரதேசம் முழுவதும் பரவலாக நடைபெற்ற போலீசாரின் அதிரடி சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையில், பயங்கரவாதச் சதியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் அட்னான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சோதனையின் போது, இருவரிடமிருந்தும் குண்டு, துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் உட்பட பல ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆரம்ப விசாரணையில், இவர்கள் இருவருக்கும் சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் நேரடி தொடர்பு இருப்பது வெளிச்சத்துக்குவந்துள்ளது.

மேலும் அதிர்ச்சியாக, இவர்கள் இருவரும் தற்கொலைத் தாக்குதல் (Suicide Attack) பயிற்சி பெற்றவர்கள் என்றும், டெல்லியில் பெரிய அளவிலான குண்டு வெடிப்பு நடத்தும் சதி தீட்டியிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது காவலர்கள் இருவரையும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த கைது நடவடிக்கை தலைநகரில் பாதுகாப்பு எச்சரிக்கை நிலையை மேலும் உயர்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shock in Delhi 2 people with ISIS links arrested Explosives seized


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->