இறுதி சடங்கு வீட்டில் அதிர்ச்சி...! இறந்ததாக தெரிவித்தவர் உயிருடன் இருந்த ஆச்சர்யம்... பின்பு நடந்த திருப்பம் என்ன தெரியுமா...? - Seithipunal
Seithipunal


ஆந்திரப் பிரதேசத்தின் என்.டி.ஆர் மாவட்டம் ஆள்ளூருபாடு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வருலு (55), உடல்நலக்குறைவால் கம்மம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது நிலை திடீரென மோசமடைந்து கோமா நிலையில் சென்றதால், மருத்துவர்கள் நம்பிக்கை இழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, குடும்பத்தினர் அவரை உயிரிழந்ததாக கருதி கிராமத்தில் இறுதி சடங்குகளுக்கான ஏற்பாடுகளைத் தொடங்கினர். மேலும், வீட்டு முன் பந்தல் அமைத்து, ஐஸ் பெட்டி வைத்துப் பந்தோபஸ்து செய்யப்பட்ட நிலையில், உறவினர்கள் திரண்டனர்.

ஆனால், மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸில் கொண்டு வரப்பட்ட உடலை இறக்கும்போது, வெங்கடேஸ்வருலுவில் உயிர் இருப்பது அதிர்ச்சியாக தெரியவந்தது.

இதனால் கலங்கிய குடும்பத்தினர் உடனடியாக அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.மேலும், விஜயவாடா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

அதன் பின்னர் மருத்துவர்கள் அவரது மரணத்தை உறுதிப்படுத்தினர். ஏற்கனவே நடந்த குழப்பத்தால் வீடு திரும்பிய உறவினர்கள் மீண்டும் அழைக்கப்பட்டு, அடுத்த நாள் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shock funeral home man who reported dead alive surprisingly Do you know what happened next


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->