பாபர் மசூதி இடிப்பு, பால் தாக்கரே படத்துடன் விளம்பரம்.. சிவசேனா உருவாக்கிய சர்ச்சை.!  - Seithipunal
Seithipunal


இந்துக்களின் பல நூற்றாண்டு கனவான அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது என்பது நேற்றைய தினம் நனவானது. ராமர்கோவில் கட்டும் பணி பூமிபூஜையுடன் நேற்று ஆரம்பமானது, இவ்விழாவில் கலந்து கொள்ள அழைப்பு இல்லாததால் சிவசேனா தரப்பு சற்று அதிருப்தியில் உள்ளது. அதே நேரம் பாபர் மசூதி இடிப்பில் தங்களுக்கு சம்மந்தம் இருக்கிறது என நேற்று சாமனா பத்திரிக்கையின் கட்டுரையில் சிவசேனா தெரிவித்து உள்ளார். 

அதே போல அந்த பத்திரிக்கையில் ஒரு சர்ச்சைக்குறிய விளம்பரமும் வெளியானது. பாபர் மசூதி இடிப்பு படமும் மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரே முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மகன் ஆதித்திய தாக்கரே ஆகியோரின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளன. அதேபோல் இதை செய்த மனிதர்கள் குறித்து பெருமை அடைகிறேன் என்ற பால் தாக்கரேவின் வசனமும் இடம்பெற்று இருந்தது. 

இது மிகப்பெரிய சர்ச்சையாகி உள்ளது. இந்த விளம்பரத்தை சிவசேனாவின் செயலாளர் மிலிந்த் நர்வேகர் செய்திருந்தார். சிவசேனாவின் தலைவர் சஞ்சய் ராவத் சில தினங்களுக்கு முன்  பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில் அயோத்தியில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் ராமர் கோவில் பூமிபூஜைக்கு முதல்வர் செல்லவதற்க்கான வாய்ப்பு குறைவு, பிரதமர் செல்வது தான் முக்கியம். 

முதல்வர் எப்போதும் வேண்டுமானாலும் செல்லாலாம் என கூறியிருந்தார். ராமர்கோவில் கட்டுமான பணிகள் தொடங்குவது மற்றும் பிரதமர் அடிக்கல் நாட்டுவது ஆகியன தவிர்த்து வேறு பொன்னான தருணம் இல்லை என கடந்த செவ்வாய் அன்று தெரிவித்திருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shivsena magazine triggered a controversy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->