'சஞ்சார் சாத்தி செயலி' சர்ச்சை ; 'ஜனநாயகத்தில் அனைத்தையும் கட்டாயமாக்குவது சிக்கலாகும்; சசி தரூர் கருத்து..! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மொபைல் போன் உற்பத்தியாளர்கள் அனைத்து புதிய கைபேசிகளிலும் விற்பனைக்கு முன் 'சஞ்சார் சாத்தி செயலி'யை நிறுவுவதை தொலைத்தொடர்புத் துறை கட்டாயமாக்க நடவடிக்கை எடுத்த நிலையில், அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், தெரிவித்துள்ளதாவது:

"எனது பொது அறிவின்படி, இதுபோன்ற செயலிகள் விருப்பத்தேர்வாக இருந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றும்,   தேவைப்படுபவர்கள் அவற்றைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஜனநாயகத்தில் அனைத்தையும் கட்டாயமாக்குவது சிக்கலாக இருக்கும் என்றும், உத்தரவுகளை பிறப்பிப்பதற்குப் பதிலாக, அரசாங்கம் ஊடக அறிக்கைகள் மூலம் பொதுமக்களுக்கு எல்லாவற்றையும் விளக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், நாம் ஒரு விவாதத்தை நடத்த வேண்டும் என்றும், அரசாங்கம் இந்த முடிவின் பின்னணியில் உள்ள காரணத்தை விளக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். 

இந்நிலையில், 'சஞ்சார் சாத்தி செயலி' மொபைல் போன்களில் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற உத்தரவில் இருந்து மத்திய அரசு தற்போது பின்வாங்கியுள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவிக்கையில்,  "இந்த செயலி அனைவரையும் சென்றடையச் செய்வது நமது பொறுப்பு. நீங்கள் அதை நீக்க விரும்பினால், அதை நீக்குங்கள். நீங்கள் அதைப் பயன்படுத்த விரும்பவில்லை என்றால், அதை பதிவு செய்யாதீர்கள்.

நீங்கள் செயலியில் பதிவு செய்தால், அது செயலில் இருக்கும். நீங்கள் அதைப் பதிவு செய்யாவிட்டால், அது செயலற்றதாகவே இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shashi Tharoors opinion against the Sanchar Saathi app


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->