சூடுபிடித்துள்ள தெரு நாய் விவகாரம்: ''நகராட்சிக்கு வேண்டாம், நம்பகமான விலங்கு நல அமைப்புகளுக்கு நிதி வழங்குங்க''; சசிதரூர் யோசனை..!
Shashi Tharoor demands a review of the Supreme Courts order on the street dog issue
நாட்டில் தெரு நாய்கள் விவகாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. டில்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அத்துடன், காங்கிரஸ் எம்பி சசி தரூரும் இந்த உத்தரவை நீதிமன்றம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இது குறித்து சசி தரூர் மேலும் கூறியதாவது: ஒவ்வொரு நகரத்திலும் உள்ள சாதாரண குடிமக்களைப் பாதிக்கும் பிரச்சினைக்கு இது ஒரு சிந்தனைமிக்க பதில் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாய்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளும் போது மனிதர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும், ஆனால், நமது அமைப்பில் உள்ள குறைபாடு வளங்களின் பற்றாக்குறை அல்ல, மாறாக நிதி வழங்கப்பட்டிருந்தாலும் கூட, தெருநாய்களைச் சுற்றி வளைத்து கருத்தடை செய்யும் பணியைச் செய்ய நகராட்சிகள் விருப்பமின்மை அல்லது இயலாமை என்பதை யாரும் குறிப்பிடவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த நிதி உண்மையில் தேவைப்படும் இடங்களில் செலவிடப்படுவதில்லை எனவும், தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், நாய் மேலாண்மைக்கான நிதியை நகராட்சிகளுக்கு கொடுப்பதற்கு பதிலாக நம்பகமான விலங்கு நல அமைப்புகளுக்கு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஏனெனில், அவர்கள் அந்த திட்டத்தை நன்கு செயல்படுத்துவார்கள் என்று யோசனை கொடுத்துள்ளார்.
English Summary
Shashi Tharoor demands a review of the Supreme Courts order on the street dog issue