ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை – சாலையோரம் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்!
Sexual assault in a moving car Young woman thrown on the roadside
மகாராஷ்டிரா, புனே மாவட்டத்தின் லோனாவாலா பகுதியில் ஒரு 23 வயது இளம்பெண், காரில் கடத்தப்பட்டு தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பின், சாலையோரத்தில் தூக்கி வீசப்பட்ட பரிதாபமான சம்பவம் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா, புனே மாவட்டத்தின் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் லோனாவாலா நகர காவல் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்துள்ளார்.வெள்ளிக்கிழமை இரவு வீடு திரும்பிய இளம்பெண், வழியில் ஒரு கார் அருகில் நின்றதாக தெரிவித்தார்.
காரில் இருந்த நபர், வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று, தனிமையான இடங்களுக்கு அழைத்துச் சென்றார்.ஓடும் காரிலேயே தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது
பின்னர், துங்கார்லி பகுதியில் சனிக்கிழமை அதிகாலை சாலையோரத்தில் தூக்கி வீசப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
விசாரணை மற்றும் கைது:முதலில் 3 பேர் சம்பந்தப்பட்டதாக கூறியிருந்தாலும், போலீசார் விசாரணையில் ஒரே ஒரு நபர், முன்பே அவருக்கு அறிமுகமாக இருந்தவர் என்பதும் தெரியவந்தது.இது தொடர்பாக துங்கார்லி பகுதியைச் சேர்ந்த 35 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவர் மீது லோனாவாலா நகர காவல் நிலையத்தில் வன்கொடுமை, கடத்தல், தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.ஓடும் காரில் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டு சாலையோரம் தூக்கி வீசப்பட்ட சம்பவம் மகாராஷ்டிரா, புனே மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Sexual assault in a moving car Young woman thrown on the roadside