ஆந்திரா கோதாவரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு.! நீரில் தத்தளிக்கும் 300 கிராமங்கள்.! - Seithipunal
Seithipunal


கடந்த ஒரு சில வாரங்களாக தென்மேற்கு பருவ மழை காரணமாக மஹாராஷ்டிரா, அசாம், தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதனால் அமராவதி மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது 

இந்த வெள்ளப்பெருக்கில் நுாற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தடுப்பணைகளும் நிரம்பி வழிவதால் கடும் வெள்ளப்பெருக்க ஏற்பட்டு கோதாவரி ஆற்றின் குறுக்கே உள்ள ஆறு மாவட்டங்களில் உள்ள 300 கிராமங்கள் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இவற்றில், 36 கிராமங்கள் முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதையடுத்து மாநில மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மையைச் சேர்ந்த 10 குழுக்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 62 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், 220 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Severe flood in andrapradesh 300 villages submerged


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->