சாய தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து - தொழிலாளர்களின் கதி என்ன? போலீசார் தீவிர விசாரணை.!
seven peoples died in delhi paint factory fire accident
தலைநகர் டெல்லியில் அலிபூர் மார்க்கெட்டில் தனியாருக்கு சொந்தமான சாய தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும், பெயிண்ட் தொழிற்சாலையில் ரசாயனங்கள் இருந்ததால் தீயின் தாக்கம் என்பது தொடர்ந்து அதிகரித்தது. இதையடுத்து கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவைழக்கப்பட்டு தீயை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. சுமார் 4 மணிநேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.
இருப்பினும், அந்த பகுதியில் கரும்புகை அதிகளவில் சூழ்ந்ததனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும் தொழிற்சாலை தீவிபத்தில் சிக்கி 7 பேர் பலியாகி இருப்பது தெரியவந்தது. தீயணைப்பு வீரர்கள் அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் இந்த தீ விபத்து சம்பவம் எப்படி நடந்தது? திட்டமிட்ட சதியா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாய தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
seven peoples died in delhi paint factory fire accident