பெரும் சோகம்! பஸ்-கார் நேருக்கு நேர் மோதி விபத்து! சம்பவஇடத்திலே 7 பேர் பலி! - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேசத்தில் பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்திர பிரதேசத்தில் தொடர்ந்து அடிக்கடி பேருந்துகள் விபத்துக்குள்ளாகும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அரசு பேருந்து பள்ளத்தில் கவர்ந்து 8 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் உத்தரப்பிரதேசத்தில் இரண்டு டபுள் டக்கர் பேருந்து டெல்லியை நோக்கி சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. எட்டாவாவில் ஆக்ரா லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று சென்று கொண்டிருந்துள்ளது.
அப்போது அதே நெடுஞ்சாலையில் எதிரே வந்த கார் ஒன்று பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதி உள்ளது. இதனால் பேருந்து நிலைய தடுமாறி நின்றுள்ளது.

இந்த நிலையில் பேருந்தில் பயணம் செய்த 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம்  அடைந்துள்ளனர். இந்த விபத்தை நெடுஞ்சாலையில் வந்த வாகன ஓட்டிகள் கவனித்து இது தொடர்பாக மீட்டுக் குழுவுக்கும் காவல் துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்த அங்கு வந்த காவல்துறை காயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த ஏழு பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seven killed in bus car head on accident in Uttar Pradesh


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->