மூத்த தாரத்து பெண்ணை சேற்றில் தள்ளி வெளுத்து வாங்கும் 2-வது மனைவி...! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


கர்நாடகா மண்டியா மாவட்டத்தில் மத்தூர் தாலுகா டி.மல்லிகெரே பகுதியை சேர்ந்த புட்டசாமி என்பவர் 2 மனைவிக்காரர் ஆவார். இவரது முதல் மனைவி சுகன்யாக்கும் இருவருக்கும்   ரோஜா என்ற மகளும்,ராகேஷ் என்ற மகனும் உண்டு.இதில் சில ஆண்டுகளுக்கு முன்பு சுகன்யா தற்கொலை செய்து கொண்டதையடுத்து புட்டசாமி, பாக்யா என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

தற்போது பாக்யாவுக்கும் பிள்ளைகள் உள்ளனர். இதில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு புட்டசாமி இறந்துவிட்ட நிலையில், 6 ஏக்கர் நிலத்தை பங்கிட்டு கொள்வது தொடர்பாக புட்டசாமியின் முதல் மனைவி, 2-வது மனைவி குடும்பத்தினருக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே,ஊர்த்தலைவர்கள், முதல் மனைவியின் பிள்ளைகளான ராகேஷ், ரோஜாவுக்கு 4½ ஏக்கர் நிலத்தையும், பாக்யாவுக்கு 2 ஏக்கர் நிலத்தையும் பங்கிட்டு கொள்ளும்படி தெரிவித்தனர்.ஆனால் இதற்கு மறுத்த ராகேஷ், ரோஜா,இதை எதிர்த்து அவர்கள் காவலில் புகாரளித்தனர். ஆனால் விசாரணை நடத்தி, பாக்யாவுக்கு 3 ஏக்கர் நிலத்தை வழங்கினர்.

இதனால் ரோஜா மற்றும் ராகேஷ் ஆத்திரமடைந்தனர்.இதற்கிடையே பாக்யா தனக்கு ஒதுக்கிய 3 ஏக்கர் நிலத்தை உறவினருக்கு குத்தகைக்கு விட்டு இருந்தார். அதில் அந்த உறவினர், ஒரு பகுதியில் கரும்பு சாகுபடி செய்திருந்தார். இதுபற்றி அறிந்த ரோஜா, அவரது கணவர் சூரி, மாமியார், பாட்டி ஆகியோர் பாக்யாவின் நிலத்திற்கு வந்து, அங்கு பயிரிட்டிருந்த கரும்புகளை பிடுங்கி எறிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதை அறிந்த பாக்யா தட்டிக்கேட்டுள்ளார்.இதைத் தொடர்ந்து வாய்த்தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டது. ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த சமயத்தில் சித்தியான பாக்யா, ரோஜாவை சேற்று வயலில் தள்ளி தாக்கினார். பின்னர் ரோஜா மீது அமர்ந்துக் கொண்டு பாக்யா கைகளால் சரமாரியாக தாக்கினார்.

இதற்கிடையே சித்தியான பாக்யா, இளம்பெண் ரோஜா மீது அமர்ந்து தாக்கியதை யாரோ செல்போனில் படம் பிடித்துள்ளனர். 



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

second wife who bought elder daughter by throwing her mud What happened


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->