பள்ளி மாணவனின் உயிரை பறித்த முப்பது ரூபாய்.! உ.பியில் கொடூரம்.! - Seithipunal
Seithipunal


பள்ளி மாணவனின் உயிரை பறித்த முப்பது ரூபாய்.! உ.பியில் கொடூரம்.!

உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பதினேழு வயது சிறுவன் ஹிருத்திக். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் ஹிருத்திக்குக்கும், அவரது ஊரைச் சேர்ந்த மூன்று இளைஞர்களுக்கும் முப்பது ரூபாய் வாங்கியது தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக நேற்று முன்தினம் இவர்களுக்கிடையே மீண்டும் தகராறு எழுந்துள்ளது. 

இந்தத் தகராறு சிறிது நேரத்தில் முற்றியத்தில், மூன்று இளைஞர்களும் சேர்ந்து சிறுவன் ஹிருத்திக்கை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர் அவர்கள் மூன்று பேரும் அங்கிருந்தது தப்பித்துச் சென்றுவிட்டனர். 

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசார் விரைந்து வந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முப்பது ருபாய் பணப்பிரச்னைக்காக சிறுவன் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school student murder in uttar pradesh for thirty rupees problam


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?




Seithipunal
-->