மணல் கடத்தலை தடுக்கச் சென்ற பெண் அதிகாரி - கொடூரமாகத் தாக்கிய கடத்தல் கும்பல்.! - Seithipunal
Seithipunal


மணல் கடத்தலை தடுக்கச் சென்ற பெண் அதிகாரி - கொடூரமாகத் தாக்கிய கடத்தல் கும்பல்.!

பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா மாவட்டம், பிஹ்தா பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தல் நடைபெறுவதாக அரசு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சுரங்கத்துறை பெண் அதிகாரி சம்பவ இடத்திற்கு சோதனை நடத்தச் சென்றுள்ளார். 

இதையறிந்த மணல் கடத்தல்காரர்கள் திடீரென அந்த பெண் அதிகாரி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர் அவரை கீழேத் தள்ளிவிட்டு தரதரவென்று இழுத்துச் சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற போலீசார் பெண் அதிகாரியைத் தாக்கியதாக 44 பேரை கைது செய்து அவர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

மேலும், இந்த சம்பத்தில் தொடர்புடைய பலரையும் தேடி வருகின்றனர். இதற்கிடையே இந்த கொடூர தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sand smuggling gang attack woman officer in bihar


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->