சபரிமலை மகரஜோதி... திரளாக கலந்து கொண்ட பக்தர்கள்.. விண்ணை பிளந்த சுவாமியே சரணம் ஐயப்பா கோஷம்..!!  
                                    
                                    
                                   sabarimala magara jothi 
 
                                 
                               
                                
                                      
                                            இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலையில் கடந்த இரண்டு மாதங்களாக ஐயப்ப பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், தைத்திருநாள் சிறப்பாக சபரிமலையில் மகரஜோதி மிகவும் பிரபலமான ஒன்றாகும். 
சபரிமலையில் மகரஜோதி தரிசனம் மற்றும் மகரவிளக்கு பூஜையானது இன்று நடைபெறவுள்ள நிலையில், கேரள மாநிலத்தில் பாதுகாப்பு பணிகளும் காவல் துறையினரால் பலப்படுத்தப்பட்டுள்ளது. 
ஐயப்பன் கோவில் உள்ள சபரிமலை மகர சங்கராந்தி தினத்தில், அங்குள்ள பொன்னம்பல மேட்டில் மாலை சரியாக 6 மணிக்கு மகரஜோதியானது தெரியும். இதனை காண்பதற்கு இலட்சக்கணக்கில் மக்கள், ஐயப்ப பக்தர்கள் குவிந்த வண்ணம் இருப்பார்கள். 

இதனைத்தொடர்ந்து ஐயப்பன் கோவிலில் இருக்கும் சன்னிதானத்தில் மகரவிளக்கு பூஜை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு சுமார் 1400 க்கும் மேற்பட்ட காவல் துறையினர், 15 துணைக்காவல் துரைக்கணணிப்பாளர்கள் மற்றும் 36 காவல்துறை ஆய்வாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். 
இலட்சக்கணக்கான மக்கள் மகரஜோதியினை காண வருவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, தேசிய மீட்புப்படையினரும் சபரிமலையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
Tamil online news Today News in Tamil