பெங்களூருவில் நடந்த சாலை விபத்து...!!! தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள்...! ஒருவர் பலி....
Road accident in Bengaluru Motorcycle thrown One killed
கர்நாடகா பெங்களூரு பேகூர் சாலையின் விஸ்வபிரியநகரை சேர்ந்தவர் 'சிவானந்தா பாட்டீல்' என்பவர். இவர் தனியார் நிறுவன ஊழியர் ஆவார். இவரது மகன் 19 வயதான 'ஷ்ரேயாஸ் பாட்டீல்' என்பவர் பி.காம் மாணவர்.

இவர் அக்ஷய் நகரை சேர்ந்த நண்பர் கே. சேத்தனுடன் இன்று அதிகாலை 3.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்தார்.அந்த நேரம், மோட்டார் சைக்கிள் ரிச்மண்ட் சர்க்கிள் ரெசிடென்சி சாலையை நோக்கி செல்லும் மேம்பாலத்தின் பக்கவாட்டு தடுப்புச் சுவரில் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக மோதியது.
இதன் காரணமாக இருவரும் 25 அடியரத்திலிருந்து பாலத்தின் கீழேவுள்ள சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.இச்சம்பவத்தில், இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
மேலும் இவர்களை செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், தலையில் பலத்த காயமடைந்த 'ஷ்ரேயாஸ்' பரிதாபமாக இறந்தார்.
மேலும், சேத்தனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு தீவீரமாக சிகிச்சையில் உள்ளார்.இது பெங்களுருவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Road accident in Bengaluru Motorcycle thrown One killed