மினிமம் பேலன்ஸ் குறித்த குழப்பத்திற்கு விளக்கம் கொடுத்த ஆர்பிஐ கவர்னர்...!
RBI Governor explains confusion over minimum balance
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தற்போது minimum balance குறித்து விளக்கம் கொடுத்துள்ளது.இதில் இந்தியாவின் வங்கி ஒழுங்குமுறை அமைப்பான இந்திய ரிசர்வ் வங்கி (RBI), எந்த ஒரு வங்கிகளின், சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்புத்தொகையை நிர்ணயிக்காது என்று தெளிவுபட அறிவித்துள்ளது.

இதற்காக அண்மையில்,அதாவது கடந்த ஆகஸ்ட் 11 அன்று குஜராத் மாவட்டத்தில் நடந்த ஒரு நிதி நிகழ்வின் போது ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்ததாவது, "சேமிப்பு கணக்குகளின் குறைந்தபட்ச இருப்புத் தேவையையும், அதைப் பூர்த்தி செய்யாததற்கான அபராதங்களையும் சம்பத்தப்பட்ட வங்கிகள் தான் தீர்மானிக்கிறது.
எந்த ஒரு வங்கியின் குறைந்தபட்ச இருப்புத் தொகை கொள்கையம் ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறைக்கு கீழ் வராது. அதில் சில வங்கிகள் ரூ.10,000 ஆக நிர்ணயித்திருந்தாலும், சில வங்கிகள் ஜீரோ பேலன்ஸ் ( zero balance )சேமிப்பு கணக்குகளை அனுமதிக்கின்றன. இது சம்பத்தப்பட்ட வங்கியின் விருப்பம்.
நாங்கள் பொறுப்பாக முடியாது." என்று தெரிவித்தார்.இதில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்காததற்காக பஞ்சாப் நேஷனல் வங்கி ,எஸ்.பி.ஐ., கனரா வங்கி மற்றும் இந்தியன் வங்கி போன்ற வங்கிகள் எந்த அபராதத்தையும் வசூலிப்பதில்லை.அதேபோல்,சில வங்கிகள் பராமரிக்காததற்காக அபராதம் வசூலிக்கின்றன.
இதில் சில காலம் முன்பு, ICICI வங்கியில் புதிய கணக்கு தொடங்குபவர்களின் குறைந்தபட்ச சராசரி மாதாந்திர MINIMUM BALANCE உயர்த்தப்பட்டது. அவ்வகையில், நகர்ப்புற, மெட்ரோ பகுதிகளுக்கு ரூ.50,000வும், இதுவே சிறு நகரங்களுக்கு ரூ.25,000, கிராமப்புற பகுதிகளுக்கு ரூ.10,000 -வும் ICICI வங்கி உயர்த்தியது.
English Summary
RBI Governor explains confusion over minimum balance