தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 09 கொலைகள்; தலை கிறுகிறுவென சுற்றுகிறது; மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்; ஆர்பி.உதயகுமார் வீடியோ பதிவு..!
RB Udhayakumar posts a video stating that nine murders have occurred in Tamil Nadu within 24 hours
இந்த 120 நாட்களில் தவெக ஆட்சியில் கட்டுக்கடங்காமல் நடைபெற்றுவரும் குற்றச்சம்பவங்கள் கண்ணை கட்டுவதாக இருக்கிறது. தலை கிறுகிறுவென சுற்றுகிறது. அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளதவத்துள்ளதாவது;
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 09 படுகொலைகள் நடைபெற்றுள்ளது. சென்னையில் விநாயகர் ஊர்வலத்தின்போது அரசு பஸ் ஓட்டுனர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மதுரை அருகே வாலிபரை காரில் கடத்தி கொன்று தண்ணீர் தொட்டியில் வீசியுள்ளனர். ராமநாதபுரம் கருவேலம்காட்டில் 02 பேர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு, திண்டுக்கல் மாவட்டங்களில் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். செங்கல்பட்டு வாலாஜாபாத்தில் மட்டும் 03 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் அதிகமாக நடைபெற்றுவரும் குற்றச் சம்பவங்களுக்கு மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம்தான் காரணம் என குற்றச்சாட்டு உள்ளது.

ஒரே நாளில் 09 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் விஜய் லண்டனில் தொழில் முதலீட்டை ஈர்க்கச் சென்றுள்ளார். தற்போது தொடர் படுகொலை நடப்பதால் மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். இதற்கு தவெக அரசு என்ன பதில் சொல்லப்போகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், இந்த 120 நாட்களில் தவெக ஆட்சியில் கட்டுக்கடங்காமல் நடைபெற்றுவரும் குற்றச்சம்பவங்கள் கண்ணை கட்டுவதாக இருக்கிறது என்றும், தலை கிறுகிறுவென சுற்றுகிறது என்று குறிப்பிட்டதோடு, அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளதாகவும் பேசியுள்ளார்.
மேலும், தேர்தல் பிரசாரத்தின்போது திமுகவை விமர்சித்த விஜய்யிடம் மக்கள் கேட்கும் கேள்வி ஒன்றுதான், நீங்கள் முன்வைத்த விமர்சனம், தற்போதைய தவெக அரசில் நடக்கும் குற்றச்சம்பவங்களுக்கு பொருந்துமா? இதற்கு முதல்வர் விஜய் பொறுப்பேற்பாரா? என்று தெரிவித்துள்ளார்.
அல்லது எப்போதும் போல டேக் டைவர்ஷன் என்று திசை திருப்புகிற, மடைமாற்றம் செய்கிற அரசியலை மிக சிறப்பாக செய்வாரா? அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
English Summary
RB Udhayakumar posts a video stating that nine murders have occurred in Tamil Nadu within 24 hours